ஹீரோ, வில்லன் இரண்டுமே அஜித் தான், ஆனால் இரட்டை வேடம் இல்லை: எச் வினோத்
அஜித் நடித்த வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி வசூலை குவித்து வருகிறது
இந்த நிலையில் அஜீத் 61 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது இதற்கான செட் அமைக்கும் பணியை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்கள் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இயக்குனர் வினோத், அஜித்தின் அடுத்த படத்தில் அவரே வில்லன், அவரே ஹீரோ என்று தெரிவித்துள்ளார்
ஆனால் அதே நேரத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எச். வினோத்தின் இந்த தகவல் அஜித் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.