1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (21:41 IST)

இத ஏன்பா தூக்குனீங்க… வெளியானது வலிமை படத்தின் டெலிடட் காட்சிகள்!

வலிமை படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை இப்போது படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அஜித்தின் வலிமை திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் கொண்டாட்டமெல்லாம் தியேட்டருக்கு உள்ளே செல்லும்வரைதான். அதன் பின் வலிமை திரைப்படம் தன் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப் படுத்தவில்லை.

இந்நிலையில் இப்போது படத்தின் டெலிடட் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அந்த காட்சியில் படத்தின் வில்லன் கார்த்திகேயா கடவுள் பற்றியும் சாத்தான் பற்றியும் அளிக்கும் விளக்கம் சம்மந்தமான காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதைப் பார்த்த பலரும் இதுபோன்ற காட்சிகளை ஏன் நீக்கினார்களோ என்ற அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.