வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (17:04 IST)

கொரோனா பிரச்சனை முடியும் வரை ‘வலிமை’ ரிலீஸ் இல்லை: அஜித் உறுதி

இந்த கொரோனா நேரத்திலும் திரைப்படங்களை ரிலீஸ் செய்து ரசிகர்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் வருமானம் மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர் என்றும் விஜய் உள்பட ஒரு சில பெரிய நடிகர்கள் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் 
 
இந்த நிலையில் அஜீத் தனது வலிமை திரைப்படத்தை கொரோனா வைரஸ் பிரச்சனை முடியும்வரை ரிலீஸ் செய்ய வேண்டாம் என தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும் மே மாதம் 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளன்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் முடிந்த பின்னர் வலிமை வெளியிடலாம் என்றும் அதுவரை இந்த படத்தை திரையிட வேண்டாம் என்றும் அஜித் வலியுறுத்தியதாகவும் அதற்கு போனிகபூரும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. எனவே கொரோனா  பிரச்சனை முழுவதுமாக நீங்கிய பின்னரே வலிமை திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது