செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 6 ஜனவரி 2021 (17:38 IST)

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்டு புத்தாண்டு கொண்டாடிய அஜித்!

பொதுவாக புத்தாண்டு உள்பட எந்த ஒரு கொண்டாட்டத்தையும் விரும்பாத அஜித் அவர்கள் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை வலிமை பட குழுவினருடன் இணைந்து கொண்டாடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இதுகுறித்து வலிமை படத்தில் பணிபுரியும் கலைஞர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது சரியாக 12 மணிக்கு தல அஜித் அவர்கள் படக் குழுவினருடன் சேர்ந்து புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினார்
 
அதுமட்டுமின்றி வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா என்ற பாடலை பாட விட்டு அவர் எங்களுடன் டான்ஸ் ஆடினார். இந்த ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தை என்னால் மறக்கவே முடியாது. இது போன்ற ஒரு புத்தாண்டு கொண்டாட்டம் இனிமேல் வருமா என்றும் என்னால் கூற முடியாது
 
புத்தாண்டில் தல அஜித்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். இதற்காக நான் கடவுளிடம் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அஜித் வலிமை படப்பிடிப்பில் ஆலுமா டோலுமா பாடலுக்கு பாட்டு பாடி டான்ஸ் ஆடி புத்தாண்டு கொண்டாடிய தகவல் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது