1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வியாழன், 24 பிப்ரவரி 2022 (05:54 IST)

'வலிமை’ படம் வெறித்தனம்: இடைவேளையில் ரசிகர்கள் பதிவு செய்த டுவிட்டுக்கள்!

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியாகி உள்ள நிலையில் இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் இடைவெளியில் பதிவு செய்த ட்வீட்டுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
 
‘வலிமை’  திரைப்படத்தில் அஜீத்தின் வெறித்தனமான நடிப்பு என்றும் இயக்குனர் வினோத் தரமான சம்பவம் செய்துள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பைக் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட்டில் கூட இந்த மாதிரி எடுத்தது இல்லை என்பதை உறுதியாக சொல்லலாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்
 
மேலும் நாங்க வேற மாதிரி பாடல் ரசிகர்களுக்கு மிகச் சிறந்த விருந்தாக அமைந்துள்ளது என்றும் பைக் ரைடர்கள் செய்யும் அதிநவீன க்ரைமை அஜித் கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை என்றும் அஜீத் இந்த படத்தில் மாஸ் ஆக நடித்திருக்கிறார் என்றும் பதிவு செய்துள்ளனர் 
 
இது இடைவேளை வரையிலான விமர்சனம் என்ற நிலையில் இடைவேளைக்கு பின் ‘வலிமை’ படம் எப்படி இருக்கிறது என்ற ரசிகர்கள் கருத்துக்களை விரைவில் பார்ப்போம்.