திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (18:32 IST)

ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் அஜித் – பார்த்திபன் மனம் திறந்த பாராட்டு!

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் நடிகர் அஜித் வில்லன் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிப்பார் எனக் கூறியுள்ளார்.

நடிகர் பார்த்திபன் அஜித்துடன் நீ வருவாய் என மற்றும் உன்னைக் கொடு என்னைத் தருவேன் ஆகிய படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் அஜித்துடன் மீண்டும் நடிக்க ஆசை எனக் கூறியுள்ளார். மேலும், அவர் ‘கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் நடிப்பைப் பார்த்து பிரமித்துவிட்டேன். அவர் ஹாலிவுட் நடிகர் ஹாக்கின் பீனிக்ஸ் நடித்த ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவுக்கு திறமையானவர். எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் நான் அவருக்கு வில்லனாக நடிப்பேன்.

ஆனால் அவர் என்னைவிட வில்லன் நடிப்பில் சிறந்தவர். ஒருவரை ஹீரோவாக்க நிறைய வேலைகள் செய்ய வேண்டும். ஆனால் வில்லனாக நடிக்க சிறந்த நடிப்புத்திறன் மட்டும் போதும். அதனால்தான் அஜித் அதற்கு தகுதியானவர் எனக் கருதுகிறேன். அஜித் ஜோக்கர் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்’ எனக் கூறியுள்ளார்.