'ஜானி’ ரீமேக் வேண்டாம், ‘தீ’ ரீமேக்கில் நடியுங்கள்: அஜித்துக்கு ரசிகர்கள் கோரிக்கை
பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படம் ஜானி,. ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரீதேவி இந்த படத்தின் இளையராஜா பாடல்கள் அனைத்தும் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தல அஜித்திற்கு ஜானி படம் மிகவும் பிடித்துப்போய் அதைப் பற்றி தனது தந்தையிடம் இந்த படத்தை நீங்கள் ரீமேக் செய்வதாக இருந்தால் நான் நடிக்கிறேன் என்று கூறியதாகவும், ஆனால் அதற்கு மகேந்திரன் மறுத்துவிட்டதாகவும் அவரது மகன் ஜான் மகேந்திரன் கூறியிருந்ததை ஏற்கனவே பார்த்தோம்
மேலும் அஜித், ‘ஜானி’ படத்தின் ரீமேக்கில் நடிப்பதைவிட ‘தீ’ படத்தின் ரீமேக்கில் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ’தீவார்’ என்ற இந்தி படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் ரஜினியுடன், சுமன், ஸ்ரீப்ரியா உள்பட பலர் நடித்திருந்தனர். ரஜினியின் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று. ‘தீ’ படத்தின் ரீமேக்கில் அஜித் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்