''ஹீரோயிச மோகத்த தூண்ட காரணமா இருக்காதீங்க ''- புளூ சட்டை மாறன் டுவீட்
ஹீரோயிச மோகத்துக்கு நேரடியாவோ, மறைமுகமாவோ தூண்ட காரணமா இருக்காதீங்க என்று புளூ சட்டை மாறன் தன் சமூக வலை பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னண் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
அத்துடன் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வியாழன் அன்று வெளியான நிலையில் ஒரு வாரம் வசூல் குறித்த நிலவரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தமிழ்ப்படம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் விஜய்யின் மகன் மட்டும் ரஜினியை தலைவா என்று கூறவில்லை. நான் திரையரங்கில் சென்று இப்படம் பார்க்கும்போது ஒரு மூன்று வயது பையனும் ரஜினியை தலைவா என்று கூறுவதைப் பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
ஜெயிலர் படத்தை நான் தியேட்டரில் பார்த்போது மூன்று வயது சிறுவன் 'தலைவா' என்று திரையை பார்த்து கத்தினான் - தனஞ்செயன் பேட்டி.
அந்த பையன் கிட்ட 'நாட்டுக்கு பாடுபட்ட காந்தி, காமராஜர், பகத்சிங் போன்றோரை தலைவா என்று சொல்றதுதான் சரி' ன்னு சொல்லிட்டு வரலையா சார்?
அதை விட்டுட்டு அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை செல்போன்ல வீடியோ எடுக்கலைன்னு வருத்தம் வேற படறீங்க.
ஒரு சாதாரண படத்துக்கு இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டிய அவசியம் என்ன சார்?
மூணு வயசு பையனை பத்தி திரும்ப திரும்ப பேசுறீங்க. விட்டுருங்க. அந்த தலைமுறையாவது உண்மையான, உருப்படியான தலைவர்களை பத்தி படிக்கட்டும்.
படிச்ச நீங்களும்...
...வளர்ந்து வரும் புதிய தலைமுறையை..
ஹீரோயிச மோகத்துக்கு நேரடியாவோ, மறைமுகமாவோ தூண்ட காரணமா இருக்காதீங்க என்று தெரிவித்துள்ளார்.