திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (15:59 IST)

சபரிமலையில் துணிவு படம் பேனருடன் அஜித் ரசிகர்கள்: வைரல் புகைப்படம்

thunivu sabarimala
சபரிமலையில் துணிவு படம் பேனருடன் அஜித் ரசிகர்கள்: வைரல் புகைப்படம்
சபரி மலைக்கு சென்ற அஜீத் ரசிகர்கள் அங்கு துணிவு படத்தின் பேனருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தற்போது அய்யப்பன் சீசன் என்பதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் சிலர் சபரிமலைக்கு மாலை அணிந்த நிலையில் அவர்கள் சமீபத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றனர்
 
அங்கு அவர்கள் அஜித்தின் துணிவு படத்தின் போஸ்டர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 
 
இந்த புகைப்படத்திற்கு சபரிமலையில் பக்தர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சபரிமலை என்பது ஐயப்பனை மட்டுமே நினைக்க கூடிய புனிதமான இடம் இன்றும் அங்கு சினிமா போஸ்டர்களை வைத்து புகைப்படம் எடுப்பது தகாத செயல் என்றும் கூறிவருகின்றனர்.
 
Edited by Siva