வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (08:25 IST)

இந்த மாசம் கண்டிப்பா அப்டேட் இருக்கு! – ட்ரெண்டாகும் #வலிமைதிருவிழா!

அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் வலிமை அப்டேட் இந்த மாதத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில் வலிமை ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் வலிமை படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை ஒரு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கூட வெளி வராததால் அஜித் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை அப்டேட் கேட்டு போர்டு பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மாதம் 15ம் தேதி வலிமை ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் #வலிமைதிருவிழா என்ற ஹேஷ்டேகையில் பெரிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.