வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (00:08 IST)

மறைந்த நடிகரின் மனைவிக்கு ஆறுதல் கூறிய சூப்பர் ஸ்டார் ஆறுதல்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார்  இன்று காலமானார். அவருக்கு வயது 98. அவரது இறப்புக்கு ஒட்டு மொத்தன்சினிமாத்துறையினரும்  இரங்கல் தெரிவித்து வரும்நிலையில் சூப்பர் ஸ்டார் அவரது மனைவியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.


கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் திலீப்குமார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திலீப்குமார் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 1944 ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான திலீப்குமார் 1998 ஆம் ஆண்டு வரை நடித்தார் என்பதும் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அவர் திரையுலகில் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

நடிகர் திலீப் குமாரின் மறைவுக்கு பாலிவுட் திரை உலகினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள் என்பதும் முக்கிய அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் பாலிவுட் பாட்சா மற்றும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மறைந்த நடிகர் திலீப்குமாரின் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.