திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2019 (16:12 IST)

விஸ்வாசம் 50 வது நாளை கொண்டாடுறேன்னு தியேட்டரை நாசப்படுத்திய அஜித் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலில் வேட்டையாடி நேற்றுடன் 50 வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.


 
சிவா இயக்கத்தில் உருவாகிய விஸ்வாசம் படம்   தமிழகத்தில் மட்டும் 125 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 
 
இந்நிலையில் நேற்றுடன் படம் வெளியாகி 50 நாள் அடைந்ததை முன்னிட்டு தமிழகத்தில் 125 திரையரங்குகளில் விஸ்வாசம் படம் திரையிடபட்டது. இத்தினத்தை கொண்டாடிய சென்னையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் பிரபல ரோகினி திரையரங்கில் உள்ள திரையை ரசிகர்கள்  கொண்டாட்டத்தின்போது கிழித்தெரிந்துள்ளனர். 
 
இதனால் 6 லட்ச ரூபாய் சேதமடைந்துள்ளது என்று திரையரங்க உரிமையாளர் கூறியுள்ளார். மேலும், இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை சிறப்பு காட்சிகளை ஓட்ட மாட்டோம் என்றும்  ரோகினி திரையரங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.