1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (11:48 IST)

துணிவு படம் வெற்றி பெற அஜீத் ரசிகர்கள் பழனிக்கு பாதயாத்திரை!

துணிவு படம் வெற்றி பெற வேண்டி அஜீத் ரசிகர்கள் பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர்.


எச் வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி உள்ள படம் துணிவு. அஜித்குமாரின் துணிவு பட டிரைலர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, இன்று இரவு 7 மணிக்கு இந்த டிரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் துபாயின் புர்ஜ் கலீபா, மற்றும் டைம் சதுக்கத்திலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே துணிவு படம் வெற்றி பெற வேண்டி அஜீத் ரசிகர்கள் பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். ஆம், துணிவு படம் வெற்றி பெற வேண்டி அஜீத் ரசிகர்கள் 30 பேர் பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.மதுரை மாவட்டம் பரவை தேசிய நாயகன் அஜீத் குமார் ரசிகர் மன்றத்தினர் பழனிக்கு பாதயாத்திரை சென்றனர்.

பரவை ஏகாம்பரஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சந்நிதியில் இருந்து 30 க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை கிளம்பினர். பரவை கார்த்தி தலைமையில் அஜீத் ரசிகர் மன்றத்தினர் பரவை ராகுல், ராக்கெட் ரஞ்சித், பிரசன்னா , ராஜா, உட்பட ஏராளமானோர் பாதயாத்திரையாக கிளம்பி சென்றனர்.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த போனிகபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.