புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2019 (09:12 IST)

டிசம்பருக்குத் தள்ளிப்போன தல 60 ஷூட்டிங் – நடிகர்கள் தேர்வு மும்முரம் !

தல 60 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதமே தொடங்க இருந்த நிலையில் இப்போது டிசம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அஜித் – ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணி நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளது. நேர்கொண்ட பார்வைக்கு எதிராக கமர்ஷியல் படமாக உருவாகும் இந்த  படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் தீவிரமாக உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் குறைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்க இருந்த நிலையில் இப்போது டிசம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானிடம் தயாரிப்பாளர் போனி கபூர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வும் மிகவும் ரகசியமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. படத்தைப் பற்றிய எந்த தகவல்களும் வெளியாகிவிடக் கூடாது என்பதில் படக்குழு தீவிரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.