உலகின் மிகப்பெரிய தியேட்டரில் வலிமை! – ஜான்வி கபூர் தகவல்!
அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தை உலகின் பெரிய திரையரங்கில் பார்க்க உள்ளதாக ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பிறகு தற்போது பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வலிமை தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் வலிமை பிற மொழி டிரெய்லர்கள் வெளியானது. இதனால் வலிமை ரிலீஸுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்துள்ளனர்.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான பிரான்சில் உள்ள லெ க்ராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் வெளியிடப்படுவதாக தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய திரையரங்கில் வலிமை படத்தை பார்க்கப் போவது உற்சாகமூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.