வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 26 ஜூன் 2024 (07:10 IST)

நம்ப முடியாத அளவுக்கு எளிமையானவர் அஜித்… சந்திப்பு குறித்து நடராஜன் நெகிழ்ச்சி!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன் டிஎன்பிஎல் போட்டிகள் மூலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி, அதில் பிரகாசித்து பின்னர் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இதற்கு அவரின் காயமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இப்போது மீண்டு வந்துள்ளார். தற்போது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடராஜன் தன்னுடைய பிறந்தநாளை நடிகர் அஜித்குமாரோடு இணைந்து கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் அன்றைய நாளில் அஜித்தை சந்தித்தது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார் நடராஜன். அதில் “என்னுடைய பிசியோதெரபிஸ்ட்டான ஷாம் சுந்தர் அஜித்துக்கும் உடல்பயிற்சி நிபுணர். அன்று ஐதராபாத்தில் அவர்களோடு என் பிறந்த நாளின் போது இரவுணவு சாப்பிட சென்ற போது சர்ப்ரைசாக அஜித் சாரை சந்திக்க வைத்தார்கள். அஜித் சார், நம்ப முடியாத அளவுக்கு சிம்பிளானவர். நாங்க எல்லோரும் கிளம்பும் போது அவரே வெளியே வந்து எங்கள் கார் கதவை திறந்து உட்காரவைத்து வழியனுப்பினார்” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.