சொந்தமாக டப்பிங் தியேட்டர் கட்டும் அஜித் – ரசிகர்கள் தொல்லைதான் காரணமா ?

Last Modified திங்கள், 23 செப்டம்பர் 2019 (11:07 IST)
நடிகர் அஜித் தனது படங்களின் டப்பிங் பணிகளை மேற்கொள்வதறகாக தனது வீட்டுக்குள்ளேயே சொந்தமாக டப்பிங் ஸ்டூடியோ கட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் எங்கு சென்றாலும் அவரை சூழ்ந்து கொள்ளும் ரசிகர் கூட்டம் செல்பி எடுப்பது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அஜித்தும் அவர்களோடு நின்று பொறுமையாக எடுத்துக்கொன்டாலும் ஏர்போர்ட் மற்றும் துக்க காரியங்கள் நடக்கும் இடத்துக்கு செல்லும்போது இதுபோன்ற செயல்கள் தர்மசங்கடத்தை உருவாக்குகின்றன.

அதனால் அஜித்தின் படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடப்பதே இல்லை. முழுவதுமாக ஆந்திராவில் மட்டுமே நடந்து வருகின்றன. அஜித் தன் படங்களுக்காக டப்பிங் பேசுவது மட்டும் தான் இதுவரை சென்னையில் நடந்தது. ஆனால் இப்போது அதற்கும் முடிவு கட்டிவிட்டார் அஜித். டப்பிங் பணிகளை மேற்கொள்ளும் போதும் ரசிகர்களின் அன்புத்தொல்லை அதிகமாக இருப்பதால் இப்போது தனது வீட்டிலேயே டப்பிங் ஸ்டூடியோ ஒன்றை கட்டி வருகிறார். இனி தனது படங்களுக்கு அதில்தான் டப்பிங் பேசவுள்ளார் எனக் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :