விஸ்வாசம் படத்தில் மனைவி ஷாலினி போன்றே நயன்தாரா !

Last Modified செவ்வாய், 27 நவம்பர் 2018 (12:35 IST)
அஜித் ரசிகர்களுக்கு இன்ப விருந்தாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஞாயிற்று கிழமை இரவு 9 மணிக்கு விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள்.இது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியது.
 
விஜய்யின் சர்க்கார் , ரஜினியின் பேட்ட என நட்சத்திரங்களின் அப்டேட்ஸ்கள் வந்து அவர் அவர்களின் ரசிகர்களை குதூகலப்படுத்தினார்கள். ஆனால் அஜித்தின் விஸ்வாசம் சம்பந்தமாக ஒரு விஷயம் கூட வெளியில் வரவில்லை இதனால்  அஜித் ரசிகர்களும் மிகவும் சோர்ந்து போய் விட்டார்கள். 
 
இந்நிலையில் தற்போது விஸ்வாசம் மோஷன் போஸ்டர் பல சாதனைகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. மிகவும் கலர்புல்லாக இருந்தது. தம்பி ராமையாவும் வழக்கத்திற்கு மாறாக இந்த படத்தை அதிகமாகப் புகழ்ந்து விட்டார். இந்த படத்தில் அஜித் கதாபாத்திரம் தூக்கு துறையாக வருவது செம்ம மாஸாக இருக்கும் என்று கூறினார். அஜித் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இந்த பொங்கல் இருக்கும் என சொன்னார்.
 
இயக்குனர் சிவா வேதாளம் படத்தில் எப்படி தங்கச்சி பாசமாக எடுத்தாரோ, அதேபோல் இந்த விஸ்வாசம் படத்தில் தன் மகள் மேல் வைக்கும் பாசமாக இருக்குமாம். அதே நேரத்தில் மனைவி மேலும் அதிக பாசம் உள்ளவராக நடித்திருப்பார் அஜித்.
 
இந்த படத்தில் டைரக்டர் சிவா நயன்தாராவிடம் கதை கூறும் பொழுது நயன்தாரா மிகவும் ரசித்து கேட்டாராம். உடனே அஜித்திற்கு போன் செய்து  இந்தப்படம் நீங்களும் ஷாலினியும் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது என்று கூறினாராம். 
 
அஜித்தின் நிஜ வாழ்க்கையைப் பார்த்து எடுத்த மாதிரி இருக்குமாம். மனைவிக்கு கொடுக்கும் மரியாதை மதிப்பு என அனைத்தும் இந்த படத்தில் இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆகமொத்தம் மிக கலகலப்பான ஜாலியான படமாக விஸ்வாசம் வெளிவரவுள்ளது என எதிர்பார்க்கலாம். 


இதில் மேலும் படிக்கவும் :