திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (08:39 IST)

என்ன சொல்ல வர்றாரு…. AK 62 பற்றிய தனது பழைய பதிவை லைக் செய்த விக்னேஷ் சிவன்

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனோ, இல்லை லைகா நிறுவனமோ இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவனின் செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

டிவிட்டரில் சில வாரங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ‘அஜித் 62’ பட அப்டேட் கொடுத்திருந்த பதிவை இப்போது லைக் செய்துள்ளார். அதையடுத்து தற்போது அஜித் 62 பட அப்டேட் வந்த போது லைகா மற்றும் அஜித் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த ட்வீட்டை இப்போது லைக் செய்துள்ளார். இதனால் அஜித் 62 பட விவகாரத்தில் தற்போதைய நிலவரம் என்ன என்பது மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.