1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (14:58 IST)

அஜித் 62 பட ஒளிப்பதிவாளர் இவர்தானா?... ரசிகர்களுக்கு குஷியான செய்தி!

அஜித் 62 படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் சமீபத்தில் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் முன் தயாரிப்பு வேலைகளை இப்போது மகிழ் திருமேனி விறுவிறுப்பாக செய்துவரும் நிலையில் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித்தோடு பில்லா, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.