வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2024 (18:33 IST)

துபாய் கார் ரேஸ் மைதானத்தில் டெஸ்ட் ட்ரைவ் செய்த அஜித்.. வீடியோ வைரல்..!

நடிகர் அஜித் துபாயில் உள்ள ஆட்டோட்ரோம் ரேஸ் டிராக்கில் போர்ஷே ஜிடி3 கப் காரை சோதனை ஓட்டமாக ஓட்டிய வீடியோவை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.  

"துபாய் ஆட்டோட்ரோம் சர்வதேச மையத்தில் சோதனை ஓட்டம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது," என்ற கேப்ஷனையும் சுரேஷ் சந்திரா பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அஜித் டெஸ்ட் டிரைவ் செய்த போர்ஷே ஜிடி3 கப் கார் ரேஸ் போட்டிகளுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்டது. இந்த கார் மணிக்கு 300 முதல் 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

காரை முழுமையாக கையாள முன்னோடிய சோதனை ஓட்டம் அவசியமாகும்; இது, போட்டிகளில் தேவையான டெக்னிக்குகளை அறிந்து கொள்ளவும், ஓட்டும் போது தன்னம்பிக்கையை பெருக்கவும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Edited by Mahendran