திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 28 அக்டோபர் 2024 (11:05 IST)

விஜய் மாநாட்டிற்கு சென்ற அஜித் ரசிகர் மாரடைப்பால் உயிரிழப்பு: தாயார் கண்ணீர்

விஜய் மாநாட்டிற்கு சென்ற அஜித் ரசிகர் ஒருவர், மாநாட்டை முடித்து வீட்டுக்கு வந்தவுடன் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக, அவரது தாயார் கண்ணீர் வடித்து கதறி அழுவது காண்போர் நெஞ்சை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில், இந்த மாநாட்டிற்கு சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல், நடுநிலை வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த மாநாட்டில் கூடினார்கள். குறிப்பாக விஜய்க்கு நேர் எதிர் போட்டியாளரான அஜித் ரசிகர்களும் ஏராளமாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் மாநாட்டில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர், மாநாட்டிற்கு சென்று வீடு திரும்பியவுடன் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும், தனது மகனின் இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை என அவரது தாயார் கண்ணீர் வடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran