செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (08:43 IST)

தற்கொலைக்கு சில தினங்களுக்கு முன்... வேலையாட்களை சந்தித்த சுஷாந்த்!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தான் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக தனது வேலையாட்கள் அனைவரையும் அழைத்து சம்பளம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) சில தினங்களுக்கு அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் போலிஸார் நடத்தி வரும் விசாரணையில் ‘இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது பணியாளர்களை அழைத்து சம்பளம் கொடுத்து, இதற்கு மேல் சம்பளம் கொடுக்கும் சூழல் தன்னிடம் இல்லை என கூறியுள்ளார்’ என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சுஷாந்த் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.