திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:45 IST)

அர்ஜூன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்?

ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் அர்ஜுன் நடிகை இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இயக்குனர் தினேஷ் லட்சுமணன் என்பவர் இயக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அர்ஜூன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
59 வயதான அர்ஜுன் இளம் நடிகை ஒருவர் ஜோடியாக நடிக்க இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு ஆசிரியை கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த கேரக்டர் அவருக்கு சவால் மிகுந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது