வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (16:54 IST)

இந்த மாதிரி ஒரு தங்கச்சி இல்லையே – சிவகார்த்திகேயனை புலம்ப வைத்த நடிகை!

நடிகர் சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சேட்டைகள் செய்யும் சிவாங்கி போல தனக்கு ஒரு தங்கச்சி இல்லையே என்று வருத்தப்பட்டுள்ளாராம்.

விஜய் தொலைக்காட்சியில் சமையலை மையப்படுத்தி ஒளிபரப்பப் படும் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள புகழ், சிவாங்கி மற்றும் ஷகீலா ஆகியோர் ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அதிகளவு சேட்டைகள் செய்து இணையத்தைக் கலக்கி வரும் சிவாங்கி போல தனக்கு ஒரு தங்கச்சி இல்லையே என்று வருத்தப்படுவதாக சிவகார்த்திகேயனே வாய்விட்டு சிவாங்கியைப் பாராட்டியுள்ளாராம்.