செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : சனி, 20 மார்ச் 2021 (21:41 IST)

ஜகமே தந்திரம்’ படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸ்?

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான திரைப்படம் ஒன்றும் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பூமிகா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி திரையரங்குகளில் ரிலீஸாகும் திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து கொண்டிருப்பதால் திரையரங்குகளில் பூமிகா படத்தை முதலில் ரிலீஸ் செய்து விட்டு அதன் பின் 15 நாட்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் செய்யலாம் என்றும் படக்குழுவினர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் அவரது திரையுலக வாழ்க்கையில் இந்த திரைப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் கார்த்திக் சுப்புராஜ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.