வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (17:14 IST)

சன் நெக்ஸ்ட் ஓடிடியில் சந்தானம் படம்: எந்த தேதியில் இருந்து தெரியுமா?

நடிகர் சந்தானம் நடிப்பில் ஜான்சன் என்பவர் இயக்கிய திரைப்படம் ’பாரிஸ் ஜெயராஜ்’. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்கிய இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது என்பது எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

இருப்பினும் சந்தானம் மற்றும் மொட்டை ராஜெந்திர்ன் காமெடியால் இந்த படம் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் அறிவிப்பு குறித்து தகவல் வெளிவந்துள்ளது
 
சன் நெக்ஸ்ட் ஓடிடியில் சந்தானம் படம்
சன் நெக்ஸ்ட் ஓடிடியில் மார்ச் 19ஆம் தேதி முதல் இந்த படம் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சந்தானம் நடித்த பாரீஸ் ஜெயராஜ் படத்தை திரையரங்கில் பார்க்க மிஸ் செய்தவர்கள் தற்போது ஓடிடியில் பார்த்து ரசித்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
திரையரங்குகளில் வெளியாகி மூன்று மாதங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம் கோரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து படங்களும் ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீசாவது வருவது திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.