புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (12:36 IST)

டிக் டாக் ஐஸ்வர்யா ராய்க்குக் கிடைத்தது சினிமா சான்ஸ்!

சினிமா நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் அம்ருதா என்ற பெண்ணுக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இருவர் படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். அதன் பின் அவர் பல படங்களில் நடித்து இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக மாறினார். தற்போது வரை சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கும் ஐஸ்வர்யா ராய் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அச்சு அசலாய் அவர் போலவே இருக்கும் பெண் ஒருவர் டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாகி வந்தார். இதையடுத்து பலரும் அவரது வீடியோக்களைப் பார்த்து வந்த நிலையில் இப்போது சினிமா ஒன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. மலையாளத்தில் சுனில் காரியத்துக்கரா இயக்கத்தில் 'பிக்காஸோ' என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.