ஞாயிறு, 9 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (08:35 IST)

பதறாதீங்க... குடும்ப குத்துவிளக்காக இருந்த நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ் தான் இது!

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் தேவரக்கொண்டாவுடன் சேர்ந்து வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தில் ராஷி கண்ணா, கேத்ரின் தெரெஸா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும் கனா' வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துவிட்டார். இந்நிலையில் தற்போது ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையணிந்து ஃபுல் மேக்கப்பில் ஸ்லிம் & பிட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதையே மறக்கடித்து விட்டார்.