1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 30 ஜூலை 2018 (11:41 IST)

பிரபல நடிகருடன் லிப்லாக் காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

வடசென்னை திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷுடன் நெருக்கமான லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வட சென்னை திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில் சமுத்திரகனி, கிஷோர், டேனியல் பாலாஜி, அமீர், ராதாரவி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் உள்ளிட்ட  பலர் நடித்துள்ளனர்.
 
அனேகன் பட பர்மா தனுஷை ஞாபகப்படுத்தும் விதமாக மீசை தாடி இல்லாமல் தனுஷ் இருக்கிறார். பிறகு அடர்த்தியான தாடியுடன் அரிவாளுடன் அலைவது, சண்டை என தனுஷின் நடிப்புக்குத் நன்றாக வெற்றிமாறன் தீணி போட்டுள்ளார். டீசரின் நாற்பதாவது நொடியில் தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இடையேயான லிப்லாக் காட்சி ஒன்று வந்துபோகிறது. வித்தியாசமான பாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா கதைக்கு தேவையாக இருப்பதனால் முத்தக்காட்சியில் நடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. செப்டம்பர் மாதம் படத்தை  வெளியிட திட்டமிட்டுள்ளனர்.