வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 10 செப்டம்பர் 2018 (11:09 IST)

'டிஆர்பி-க்காக ஐஸ்வர்யாவை வச்சுருக்காங்க'- பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி தகவல்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராதவிதமாக சென்ராயன் வெளியேற்றப்பட்டார். ஆனால் ஐஸ்வர்யா இன்னும் எலிமினேட் செய்யப்படவில்லை. இந்நிலையில் 'டிஆர்பி தேவைப்படுவதால் தான்' ஐஸ்வர்யா இன்னும் வெளியேற்றப்படவில்லை  என, பிக்பாஸ் சீசன்-1 போட்டியாளர்  காஜல் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிக் பாஸ் சீசன் 1ன் போட்டியாளர் காஜல் பசுபதி இந்த நிகழ்ச்சி குறித்து கூறுகையில்,  கமல் சார்-ஐ  சொல்லி குற்றமில்லை. அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஆனால் அவர் என்ன செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை நிகழ்ச்சியின்  இயக்குநர் தான் தீர்மானிப்பார். 
 
அவர் சொல்வதை தான் கமல் செய்கிறார். பிக் பாஸ் இயக்குநர் நிகழ்ச்சியின் டிஆர்பிக்காக ஐஸ்வர்யாவை வைத்திருக்கிறார் என்றார். இவரது கருத்தை பலர் சமூக வலைதளங்களில் ஆமோதித்து வருகிறார்கள்.