திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (12:34 IST)

ஐஸ்வர்யாவின் வாயில் வருவதெல்லாம் பொய்! அம்பலப்படுத்திய அம்மா..

பிக்பாஸ்  போட்டியாளர்  ஐஸ்வர்யா தத்தா தனது நடவடிக்கையால் பலரது கோபத்துக்கு ஆளாகி விட்டார்.

 
ராணி மகாராணி டாஸ்க்கில் அவர் நடந்துகொண்டவிதம் முகம் சுளிக்க வைத்தது . வெறுப்பில் தான் பாலாஜி மீது குப்பையை கொட்டியதாகவும் ஒப்புக்கொண்டார்.
 
இந்நிலையில் கடந்த வாரத்தில் அவர் தன் மீது குடும்பத்தினருக்கு அக்கறையில்லை. பணம் தான் முக்கியம் என நினைக்கிறார்கள். என்னை வந்து யாருமே பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
 
கடந்த வாரம் அவரின் அம்மா உள்ளே வந்து அவரை பார்த்தார். மேலும் ஐஸ்வர்யா நடந்து கொண்ட விதத்தில்  எல்லோரிடமும் மன்னிப்பும் கேட்டுகொண்டார்.
 
இந்நிலையில் ஐஸ்வர்யா குறித்த அவரது அம்மா கூறுகையில், ஐஸ்வர்யா மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவள். அவளுக்காக நான் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.
 
அவர் 16 வயதில் சென்னைக்கு நடிப்பதற்காக வந்தாள். அவரின் அப்பா அவளை நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என நினைத்தார். ஆனால் அவளுக்கு சினிமாவில் மட்டுமே ஆர்வமாக இருந்தது.
 
நான் அவளையும் கவனிக்க வேண்டும். குடும்பத்தையும் பார்க்க வேண்டும். வெகு தொலைவில் இருப்பதால் எங்களால் அலைய முடியவில்லை. அவள் தான் எங்களை பார்க்க வருவாள் என கூறியுள்ளார்.