செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (16:46 IST)

அர்ஜுன் மீதான பாலியல் புகார்: நிபுணன் இயக்குனர் மறுப்பு

நடிகர் அர்ஜுன் தன்னை காதல் காட்சிகளில் இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்பத்தியுள்ளார்.
இந்நிலையில், ‘நிபுணன்’ படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் அர்ஜுன் மீதான பாலியல் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
 
"நடிகர் அர்ஜூன் சிறந்த ‘ஜென்டில்மேன்’.  தொழில் மீது பக்தி கொண்ட திறமையான நடிகர். அவர் மீது சுருதி புகார் சொல்வது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அந்த படத்தில் நெருக்கமான காதல் காட்சி இருந்தது உண்மை. அதற்காக பலமுறை ஒத்திகை பார்த்தோம்.படப்பிடிப்பு முடிந்த பின் அர்ஜூன் என்னை தனியாக அழைத்தார். ‘எனக்கு மிக நெருக்கமான காதல் காட்சிகளை வைக்காதே, எனக்கு வயதுக்கு வந்த 2 மகள்கள் இருக்கிறார்கள்’ என்று என்னிடம் சொன்னார். அப்படிப்பட்டவரை பற்றி சுருதி ஹரிகரன் புகார் சொல்வது ஆச்சர்யமாக இருக்கு" என்றார்.