1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (15:48 IST)

ஏஜண்ட் டினா ஏற்கனவே கமலுடன் நடித்திருக்கின்றாரா? வைரல் புகைப்படம்

agent tina vasanthi
ஏஜண்ட் டினா ஏற்கனவே கமலுடன் நடித்திருக்கின்றாரா? வைரல் புகைப்படம்
கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மருமகளை கவனித்துக்கொள்ளும் வேலையாளாக நடித்த வசந்தி என்பவர் திடீரென ஏஜென்ட் டினா என்ற டைரக்டராக மாறுவார் என்பதும் அவரது அதிரடி ஆக்ஷன் காட்சியை ரசிகர்கள் எதிர்பார்க்கவே இல்லை என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஏஜென்ட் டினா கேரக்டரில் நடித்த வசந்தி ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர் ஒரு குரூப் டான்ஸர் என்றும் கமல் மட்டுமின்றி விஜய் உள்பட பெரிய நடிகர்களுடன் அவர் குரூப் டான்ஸராக நடித்து உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
 
குறிப்பாக கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் என்ற திரைப்படத்தில்  இடம்பெற்ற ஒரு பாடலில் கமல்ஹாசனுடன் ஏஜண்ட் டினா வசந்தி நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன