1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (15:54 IST)

இந்தியன் 2 தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்ற முயலும் பிரபல தொலைக்காட்சி!

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் சில ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் டான் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் “விரைவில் இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடங்க உள்ளோம்” எனக் கூறியுள்ளார். இது கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 வைத் தொடங்க உதயநிதி முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் அதன் தொலைக்காட்சி உரிமத்தை முன்னணி நிறுவனமான கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.