வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (16:31 IST)

ஏடிவி சூப்பர் பைக்கில் பறந்த விஷால்... துருக்கி ஷூட்டிங்கில் விபத்து

சுந்தர்.சி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துவரும் நடிகர் விஷால், துருக்கியில் நடைபெற்ற ஷூட்டிங்கின்போது காயமடைந்திருக்கிறார். 
 
சண்டைக்கோழி - 2 படத்துக்குப் பின்னர் அயோக்யா படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஷால். அயோக்யா ரிலீஸுக்குத் தயாராகி இருக்கும் நிலையில், சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். 
ஆக்‌ஷன் ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் துருக்கியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துருக்கியின் கப்பாடோசியா நகரில் விறுவிறுப்பான பைக் சேசிங் காட்சியைப் படக்குழுவினர் ஷூட் செய்துகொண்டிருந்தனர். ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் காட்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். அப்போது விஷால் ஓட்டிச் சென்ற ஏடிவி சூப்பர் பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், விஷாலுக்கு இடது கை மற்றும் இடது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக படகுழுவினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து விஷாலுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. விஷாலுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.