வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (08:21 IST)

ஜனவரியில் முடியும் வலிமை, பிப்ரவரியில் ‘தல 61’படப்பிடிப்பு தொடக்கம்?

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 50% முடிந்துவிட்ட நிலையில் மீதி உள்ள 50 சதவீதம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்து விட்டாலும் அதிக நபர்களை படப்பிடிப்பில் கலந்து கொள்ள வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாசம் அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அதன் பின்னர் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ஜனவரிக்குள் அஜித்தின் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜீத் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
அக்டோபர் 30-ஆம் தேதி சூரரைப்போற்று திரைப்படத்தை ரிலீஸ் செய்த உடன் ‘தல 61’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் சுதா கொங்கரா இறங்குவார் என்றும் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ‘தல 61’ ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
எனவே அடுத்த ஆண்டு தல அஜித்தின் இரண்டு திரைப்படங்கள் வெளிவர அதிக வாய்ப்பிருப்பதால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதித்து வருகின்றனர்