புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (11:17 IST)

வலிமை ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல் – ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டுள்ளது. இந்த படத்துக்காக நல்ல கட்டுமஸ்தான உடல் தோற்றத்தில் தோன்ற வேண்டும் என்று அதன் இயக்குனர் ஹெச் வினோத் முன்பே அஜித்திடம் தெரிவித்திருந்தார். அதனால் இப்போது இந்த லாக்டவுனை பயன்படுத்தி அஜித் தனது உடல்வாகை நன்கு ஏற்றி வருகிறார்.

இந்நிலையில் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பல படங்கள் படப்பிடிப்பை தொடங்கி வருகின்றன. இந்நிலையில் வலிமை படக்குழுவும் அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.