செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (23:52 IST)

958 நாட்களுக்கு பின்னர் மீண்டும் தல அஜித் தரிசனம்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் டிரைலர் இன்னும் ஒருசில நிமிடங்களில் வெளிவரவுள்ளது. இதற்கு முன்னர் அஜித் நடித்த 'என்னை அறிந்தால் படத்தின் டிரைலர் தான் வெளிவந்தது. 'வேதாளம்' படத்திற்கு நேரம் கிடைக்காததால் டிரைலர் வெளியாகவில்லை



 
 
எனவே சரியாக 958 நாட்களுக்கு பின்னர் இன்றுதான் அஜித் நடித்த படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிரைலர் பல யூடியூப் சாதனைகளை தகர்க்கும் என்று அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
 
அதுமட்டுமின்றி 'விவேகம்' ரிலீஸ் ஆகும் முன் சந்திக்கும் கடைசி வியாழக்கிழமையும் இதுதான். அடுத்த வியாழன் அன்று படம் ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.