செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : புதன், 16 ஆகஸ்ட் 2017 (18:08 IST)

தெலுங்கில் நேரடியாக மோதிக்கொள்ளும் அஜித் – தனுஷ்?

அஜித் மற்றும் தனுஷ் நடித்த படங்கள் தெலுங்கில் நேரடியாக மோதிக்கொள்ளப் போகின்றன.


 
 
அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படம், வருகிற 24ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. உலகம் முழுவதும் 25ஆம் தேதி ரிலீஸாகும் இந்தப் படம், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது. 
 
அதே நாளில், தனுஷ் நடித்த ‘விஐபி 2’ படமும் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த வாரமே ‘விஐபி 2’ உலகம் முழுவதும் வெளியானாலும், தெலுங்கில் கடந்த வாரம் 3 பெரிய படங்கள் ரிலீஸானதால் ‘விஐபி 2’ அங்கு ரிலீஸ் ஆகவில்லை. 
 
எனவே, 25ஆம் தேதி தான் ரிலீஸாகிறது. எனவே, அஜித்தும், தனுஷும் தெலுங்கில் நேரடியாக மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.