ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (13:18 IST)

தல பிறந்த நாளை கொண்டாடிய அரசு ஊழியர் - என்ன நடந்தது தெரியுமா?

நடிகர் அஜீத்தின் பிறந்த நாளை கொண்டாடிய அரசு ஊழியருக்கு, ஒரு வருடத்திற்கு சம்பள உயர்வை தடை செய்ததோடு, அவரை வேறொரு கிளைக்கு பணி மாறுதலும் செய்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


]

 
சென்னை கோடம்பக்கம் கார்ப்பரேஷன் வங்கி கிளையில் பணிபுரிந்து வந்தவர் ஜெயந்தி. இவர் தீவிர அஜீத் ரசிகை எனத் தெரிகிறது. இவர் கடந்த மே மாதம் 1ம் தேதி, அஜீத்தின் பிறந்தாளை அலுவகத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதில் சில ஊழியர்களும் கலந்துகொண்டனர். 
 
அந்நிலையில், அதை ஒரு ஊழியர் மொபைலில் வீடியோ எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து ஜெயந்தியிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், அவர் அதை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் ஜெயந்தி அளித்த விளக்கத்தில் “ஒரு பெண்ணாக எனது பணியிடத்தில் பல சவால்களை நான் சந்தித்துள்ளேன். அஜீத்தின் பிறந்த நாளை கொண்டாடியதால் எனது அன்றாட வேலை எதுவும் பாதிக்கவில்லை. அன்று, எனது வேலையின் செயல்திறனோ அல்லது வேலை மீதான அர்ப்பணிப்பு உணர்வோ சிறிதும் குறையவில்லை” எனக் கூறியிருந்தார்.
 
ஆனாலும், அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த உயர் அதிகாரிகள், அவரை தண்டிக்கும் விதமாக, அரசு ஊழியராக இருக்கும் அவருக்கு ஒராண்டுக்கு சம்பள உயர்வை நிறுத்தியதோடு மட்டுமில்லாமல், கோடம்பாக்கம் கிளையிலிருந்து ஆலந்தூர் கிளைக்கு பணி மாற்றமும் செய்து உத்தரவிட்டனர்.
 
நடவடிக்கை எடுக்கப்பட்ட ஜெயந்தி 2015ம் ஆண்டிற்கான சிறந்த ஊழியர் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.