திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (21:54 IST)

ஸ்கூல் படிக்கும் போதே இவ்வளவு மோசமா? ஷங்கர் மகள் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் பெரும் பொருட்செலவில் படமெடுத்து சூப்பர் ஹிட் கொடுத்து ரசிகர்களை வாய்பிளக்க செய்திடுவார். இவரது மகள் அதிதி ஷங்கர் வெளிநாட்டில் சென்று டாக்டர் பட்டம் பெற்றுவிட்டு தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகிவிட்டார். 
 
முதல் படமே கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கிவிட்டார். படம் ஹிட் ஆச்சோ இல்லையோ அவரது அலப்பறைகள் தான் சமூகவலைத்தளங்கள் முழுக்க தீயாக பரவி வைரலானது. 
 
அந்த படத்தை தொடர்ந்து மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கமிட் ஆனார். தொடர்ந்து நல்ல இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில், "நான் பள்ளியில் படிக்கும் போது சரியான வாலு. சொல்லப்போனால் நான் உண்மையில் ரவுடி. பல பேருடன் சண்டை போட்டு இருக்கேன் என்று கூற ஷங்கர் மகள் இவ்வளவு வாலா? என எல்லோரும் ஷாக் ஆகியுள்ளார்.