1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (22:38 IST)

அருவி அதிதிபாலனின் அதிகபட்ச கவர்ச்சி புகைப்படம்: ரசிகர்கள் அதிர்ச்சி

அருவி படத்தில் அறிமுகமான நடிகை அதிதி பாலன் அந்த படத்தில் மிக சூப்பராக நடித்து வந்ததால் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. எந்தவித கவர்ச்சியும் இன்றி என் நடிப்புத் திறமையை வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே ஏற்கவிருப்பதாக் அவர் கூறியிருந்ததால் அருவி திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்களாகியும் வேறு தமிழ் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை
 
கடந்த மாதம் தான் அவர் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது
 
இந்த நிலையில் கவர்ச்சியின்றி நடிப்பை நம்பி இருந்தால் இனிமேல் வாய்ப்பு கிடைக்காது என்று லேட்டாக புரிந்து கொண்ட நடிகை அதிதி பாலன் தற்போது கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார். அதன் முதல் படியாக நேற்று நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவில் அவர் கலந்து கொண்டபோது அவர் அணிந்திருந்த உடை படுகவர்ச்சியான இருந்ததே சாட்சியாக உள்ளது. இந்த உடையில் அதிதிபாலன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
இதனை அடுத்து அவர் கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார் என மறைமுகமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கருதப்படுவதால் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது