வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 ஜூன் 2023 (17:37 IST)

ஆதிபுரூஸ் உலகம் முழுவதும் ரூ.340 கோடி வசூல் ...ரசிகர்கள் மகிழ்ச்சி

ADIPURUSH
பிரபாஸின் ஆதிபுரூஸ் திரைப்படம் வெளியான 3 நாளில்  உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.340 கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில், பிரபாஸ்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபுரூஸ்.  இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளார்.

இப்படம் ரூ. 600 பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், பான் இந்தியா படமாக  நேற்று இப்படம்  வெளியாகியுள்ளது.

பிரபாஸ் நடித்த ’ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இருப்பினும் பிரபாஸின் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆதிபுரூஸ் படம்   வெளியான   முதல் நாளில்   இந்தியாவில் மட்டும்  ரூ.88 கோடி  வசூலித்து,   இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஆதிபுரூஷ் படம் 4 வது இடத்தைப் பிடித்துள்ளது.
 
ஏற்கனவே ஆதிபுரூஸ் படம் டிஜிட்டல், மியூசிக் வெளியீட்டு உரிமை ஆகியவை மூலம் ரூ.247 கோடி வசூலீட்டியதாக பாலிவுட் ஹங்கமா கூறியது.

இந்த நிலையில், ஆதிபுரூஸ் திரைப்படம் வெளியான 3 நாளில்  உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.340 கோடி வசூல் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், படக்குழுவினரும், பிரபாஸ் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.