வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (08:00 IST)

சலார் படக்குழுவினரை உற்சாகப்படுத்த பிரபாஸ் செய்த செயல்!

பாகுபலிக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் பிரபாஸ் தவித்து வரும் நிலையில் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கேஜிஎப் இயக்குனரும் பாகுபலி ஹீரோவும் இணைந்துள்ள சலார் திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்துக்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வரும் படக்குழுவினர் அனைவருக்கும் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து தலா 10000 ரூபாயை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் பிரபாஸ். இது சம்மந்தமான ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்து பிரபாஸைப் பாராட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

பிரபாஸ் நடிப்பில் நேற்று ரிலீஸான ஆதிபுருஷ் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபாஸை பற்றி நேர்மறையான விஷயமாக இந்த தகவல் பரவி வருகிறது.