படுமோசமான கிராபிக்ஸ், டைரக்ஷன்: ‘ஆதிபுருஷ்’ படத்தை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்..!
பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் இந்த படத்தை பார்த்த நெட்டிசங்கல் படுமோசமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் என்ற திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்பட பல மொழிகளில் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படுமோசமான விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
மிக மோசமான இயக்கம் என்றும் கிராபிக்ஸ் காட்சிகள் நகைச்சுவையாக இருக்கிறது என்றும் பதிவு செய்து வருகின்றனர். பிரபாஸின் நடிப்பு ஓகே என்றாலும் எந்த ஒரு காட்சிகள் எதுவுமே கவரும் வகையில் இல்லை என்றும் மிக மோசமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
சண்டை காட்சிகளும், பேக்ரவுண்ட் இசையும் நன்றாக இருந்தாலும் ராவணன் கேரக்டர் காமெடியாக இருக்கிறது என்றும் படத்தின் நீளமும் அதிகம் என்றும் ஒரு கார்ட்டூன் படம் பார்த்த உணர்வு கூட இந்த படத்தை பார்க்கும்போது இல்லை என்றும் பதிவு செய்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த படத்தின் பொதுமக்கள் விமர்சனம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Edited by Siva