1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 31 அக்டோபர் 2018 (15:53 IST)

அதிரடி ஆக்சனுடன் வெளியான அடங்க மறு ட்ரைலர்

நடிகர் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அடங்க மறு படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்புடன் லைக், ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. 
 
நடிகர் ஜெயம் ரவி ‘டிக் டிக் டிக்’ படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் ‘அடங்க மறு’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ளார். ஜெயம் ரவி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம்பிடித்தார்.சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில்,  இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி  மீண்டும் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பதால் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.