நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பது உண்மைதான்: அனுபமா பரமேஸ்வரன்

anubama parameshwaran
VM| Last Updated: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (16:07 IST)
கடந்த 2015 ஆம் ஆண்டில் மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின் பாலி, மடோன்னா செபஸ்டியன், ஆகியோரின் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற' பிரேமம்’ என்ற படத்தில் அனுபமா பரமேஸ்வரன்  முதன் முதலாக திரையுலகில் அறிமுகம் ஆனார்.

பின் தன் திறமையாலும் தீவிர முயற்சியாலும் மற்ற மொழிப் படங்களில்  பிரபல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

அதன் பின் 2016 ஆம் தமிழில் வெளிவந்த 'கொடி' படத்தில்  தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது  தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி திரைப்படங்களிலும் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவர் திரைத்துறையில்  பாலியல் தொல்லைகள் நடப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.புதுமுக நடிகைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருவதாகவும், இந்த தொல்லைகளை ஏற்றுக்கொள்வதை தவிர்க்கும் வரைக்கும் தடுக்கவே முடியாது’ இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :