1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (18:07 IST)

விபத்தில் சிக்கிய நடிகை...இத்தனை லட்சம் செலவா?

arunthathi nair
சமீபத்தில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை அருந்ததி நாயர் தற்போது கோமாவில் உள்ளதாகவும் அவரது சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகிறதாக தகவல் வெளியாகிறது.
 
கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை அருந்ததி நாயர். இவர் தமிழில் பொங்கி எழு மனோகரா, சைத்தன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
 
இதுதவிர மலையாள சினிமாவில் பல படங்களில்  நடித்துள்ளார்.
 
இந்த நிலையில் கடந்த மாதம் தனது சகோதரருடன் பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டது.
 
இதில், ஒரு மணி நேரம் சாலையில் கிடந்த நடிகை அருந்ததி நாயரை சிலர்  மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததாக கூறப்படுகிறது.
 
கடந்த 3 வாரங்களாக திருவனந்தரபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர். தற்போது  வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகிறது.
 
இந்த சிகிச்சைக்காக அவருக்கு தினமும் ரூ. 2 லட்சம் தேவைப்படுவதாக தகவல் வெளியாகிறது. மேலும், இதுவரை நடிகை அருந்ததிராயின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.40 லட்சம் செலவாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை திரைத்துறையினர் யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை என தகவல் வெளியாகிறது.