திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (10:18 IST)

நக்மா பிளாக் செய்த தமிழ் நடிகை… காரணம் இதுதான்!

பிரபல சினிமா நடிகையான நக்மா மைனா படத்தில் வில்லியாக நடித்த சுசானவை டிவிட்டரில் பிளாக் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை நக்மா கடந்த ஜூலை 8 ஆம் தேதி பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் ஒன்றாக பல கோயில்களுக்கு சென்று திருமணமான தம்பதிகள் செய்யும் பூஜைகளையும் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த டிவிட்டுக்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் யாராவது இந்த டிவீட்டில் கங்குலியின் மனைவியை டேக் செய்யுங்கள் எனக் கூறி ஒரு மீமை பதிவிட்டார். அந்த மீம் என்னவென்றால் மைனா படத்தில் வில்லியாக நடித்த சுசானா கோபமாக அமர்ந்திருக்கும் புகைப்படம்தான். இதனால் நக்மா அந்த ரசிகரை பிளாக் செய்தது மட்டுமில்லாமல், நடிகை சுசானாவையும் பிளாக் செய்துள்ளார். இது குறித்து பலரும் சுசானாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.